மலிவான அரசியல் விளையாட்டு

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (டி.ஒய்.எப்.ஐ) மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம் (பி.பி.சி) வெளியிட்ட தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தை கேரள மாநிலம் முழுவதும் திரையிடப்படும் என அறிவித்துள்ளனர். மத்திய அரசின் தணிக்கை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிக்கொண்டு இருகட்சிகளும் தங்களது மலிவான அரசியல் விளையாட்டை கேரளாவில் விளையாடி வருகின்றன என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். முன்னதாக, குடிமக்கள் குழு, அதாவது, முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசு அதிகாரிகள், மற்றும் முன்னாள் படைவீரர்கள் ஆகியோர், பி.பி.சி ஆவணப்படத்தை ஒரு பக்கச்சார்பான தாக்குதல் என்று விமர்சித்தும் இதனை தடுக்க வேண்டும் என கோரியும் அரசுக்கு கடிதம் எழுதினர், மேலும் இது ஆழமான எதிர்மறை மற்றும் தப்பெண்ணத்தின் பிரதிபலிப்பு என்று கருத்துத் தெரிவித்தனர். இந்த திரையிடலை நிறுத்துமாறு முதல்வர் பினராயி விஜயனிடம் வலியுறுத்திய மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன், உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கேரள மண்ணைப் பயன்படுத்த அனுமதிப்பது சரியல்ல என்றார்.