பயங்கரவாதிகள் பற்றிய தகவலுக்கு ரொக்கப் பரிசு

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பில் உறுப்பினர்களான பண்ட்வால் தாலுகாவில் உள்ள கொடாஜேவைச் சேர்ந்த முகமது ஷெரிப் மற்றும் நெக்கிலாடியைச் சேர்ந்த கே.ஏ மசூத் என்பவர்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தால் தலா 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், பெங்களூரில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அறிவித்துள்ளது. பா.ஜ.க இளைஞரணிச் செயல்பாட்டாளர் பிரவீன் நெட்டாருவின் கொலை வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ, இந்த வழக்கில் இவர்களுக்கு தொடர்புடையதாக கருதுகிறது. முன்னதாக, பெல்லாரியை சேர்ந்த எஸ் முகமது முஸ்தபா மற்றும் அபுபக்கர் சித்திக், குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரியைச் சேர்ந்த எம்.எச் துஃபைல், கல்லுமுட்லுமானைச் சேர்ந்த எம்.ஆர் உம்மர் ஃபாரூக் ஆகிய நான்கு சந்தேக நபர்களின் தகவல்களைப் பகிர்வோருக்கு மொத்தம் ரூ 14 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று நவம்பர் 2022ல் என்,ஐ,ஏ அறிவித்தது நினைவு கூரத்தக்கது.