கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டிக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், “மைசூருவில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் (ஏ.எஸ்.ஐ) கல்வெட்டுப் பிரிவில் பாதுகாக்கப்பட்ட சுமார் 28,000 தமிழ் கல்வெட்டுகளை சென்னை மண்டலத்தில் உள்ள கல்வெட்டுப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இந்தச் கல்வெட்டுகளை மாற்றுவதற்கான செயல்முறை ஜனவரி மாதம் தொடங்கியது. இந்திய தொல்லியல் துறையின் சென்னை மண்டல அலுவலகத்தில் இந்த கல்வெட்டுகளை பராமரிக்க தேவையான வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முக்கியமான கல்வெட்டுகள் வெப்பநிலை உணர்திறன் மற்றும் பாதகமான வானிலை காரணமாக உடையக்கூடும். இந்த தமிழ் கல்வெட்டுகள் வரலாற்று சிறப்பு மிக்கவை. அவை பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, சென்னையில் இதற்கு தகுந்த வசதியை ஏற்படுத்தித் தருமாறு கலாசார அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.