கங்காவிலாஸ் தரைதட்டவில்லை

வாரணாசியில் இருந்து ஜனவரி 13ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைத்த உலகின் மிகப்பெரிய நதி கப்பலான’கங்கா விலாஸ்’ கப்பல், கங்கை நதியில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, டோரிகஞ்ச் பகுதிக்கு அருகே சாப்ராவில் தரைதட்டி நின்றதாகவும் இதனால், எஸ்.டி.ஆர்.எப் குழு சுற்றுலா பயணிகளை ஒரு சிறிய படகு மூலம் மீட்க சம்பவ இடத்திற்கு சென்றதாகவும்சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இழுவைப் படகு மூலம் கப்பல் கரைக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியில் உண்மை இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ள துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம், டோரிகஞ்சில் உள்ள நீர்வழிப்பாதையில் கப்பலின் வரைவுத் தேவையான 1.4 மீட்டரை விட 3.5 மீ ஆழம் அதிகமாகவே உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் கப்பல் நங்கூரமிடும் இடம் மற்றும் படகுதுறைக்கு செல்லும் போக்குவரத்து அதன் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைகள் கப்பல் நிர்வாகத்தால் தீர்மானிக்கப்படுகிறது என கூறியுள்ளது.