வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கையான ஸ்ருதி என்பவர் தேர்வானார். இவர் தமிழகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கையாவார். இவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேலகரந்தை கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் கி. செந்தில் ராஜ், அட்சியர் அலுவலக அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.