வரும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக ஆளுநர் பொங்கல் விழா அழைப்பிதழை வெளியிட்டுள்ளார். அழைப்பிதழில் கடந்த ஆண்டு தமிழக அரசின் இலச்சினை இருந்த நிலையில் இந்த ஆண்டு மத்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது. இது வழக்கம் போல திராவிட கட்சியினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினருக்கு பி.பி’யை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.