உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

அல் கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் பிற சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் ஈடுபட்டு உள்ள நபர் அகமது அஹாங்கர் என்ற அபு உஸ்மான் அல் கஷ்மீரி. ஆப்கானிஸ்தானில் தற்போது உள்ள அந்த பயங்கரவாதி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் 1974ல் பிறந்தவர். பாரதத்தின் காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் உள்பட பலரை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். பாரதத்தை மையமாகக் கொண்டு, ஆன்லைன் வழியேயான ஐ.எஸ்.ஐ.எஸ் பிரசார பணிக்கான வேலைகளில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டம், 1967ன் கீழ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய அகமது அஹாங்கர் என்ற அபு உஸ்மான் அல் கஷ்மீரியை பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இவரை 20 வருடங்களுக்கும் மேலாக தேடப்படும் பயங்கரவாதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது.