சத்தீஸ்கரில் ஒரு லவ்ஜிஹாத் கொலை

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தை சேர்ந்த நீல்குசும் பண்ணா என்ற 20 வயது பெண் பிறப்பால் பழங்குடியினர்.ஆனால், சில காலம் முன்பு அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.கடந்த 3 ஆண்டுஅளுக்கு முன்பாக இவர், ஷாபாஸ் கான் என்ற முஸ்லிம் நபருடன் நட்பாக பழகினார்.பின்னர் ஷாபாஸ் கான் வேலைக்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றார்.இருவரும் சிறிது காலம் தொடர்பில் இருந்தனர்.பின்னர், அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்தினார்.ஷாபாஸ் கான் நீல்குசும் பண்ணாவை அலைபேசியில் அணுக முயன்றார், ஆனால் அவர் அதனை நிராகரித்தார். இதனையடுத்து சத்தீஸ்கருக்கு தனது கூட்டாளி தர்பேஸ் கானுடன் என்ற ஷாபாஸ் கான், வீட்டில் தனியாக இருந்த நீல்குசும் பண்ணாவின் வாயை தலையணையால் மூடி ஸ்க்ரூடிரைவரால் 51 முறை குத்தி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவரின் மார்பில் 34 முறையும், முதுகில் 16 முறையும், பக்கவாட்டில் ஒரு முறையும் ஸ்க்ரூடிரைவர் மூலம் குத்தப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் சகோதரர் பின்னர் வீட்டிற்கு வந்தபோது பண்ணா இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு காவல்துறைக்கு புகார் அளித்தார்.காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஷாபாஸ் கானை தேடி வந்தனர்.இதனிடையே ஷாபாஸ் கான், நீல்குசும் பண்ணாவை கொன்ற பிறகு, அம்பிகாபூருக்கும் பின்னர் அங்கிருந்து நாக்பூருக்கும் சென்று தலைமறைவானார்.மற்றொரு குற்றவாளியான தர்பேஸ் கான், முக்கிய குற்றவாளியான ஷாபாஸ் கான் கோர்பாவிலிருந்து தப்பிக்க உதவினார்.இது தொடர்பாக நான்கு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.ராஜ்நந்த்கானில் இருந்து வேறொரு பகுதிக்க்கு தப்பிச்செல்ல முயன்ற குற்றவாளியை பயணிகள் பேருந்தில் காவலர்கள் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.விசாரணையில, ஷாபாஸ் கான், நீல்குசும் பண்ணாவை ஸ்க்ரூடிரைவரால் பலமுறை குத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.