திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான சாகேத் கோகலே, கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக குஜராத் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், அகமதாபாத் அழைத்துச் செல்லப்பட்டார். அவர், திருணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விசுவாசமாக சமூக ஊடக செயற்பாட்டாளராக இருந்தவர். சாகேத் கோகலே, சமூக செயல்பாடுகள் என்ற பெயரில் ஏமாற்றி மக்களிடம் பணம் பறித்த ஒரு வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கோகலே இதற்காக பணம் பெற்றுக் கொண்ட கணக்குகளை காவல்துறையினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர். சாகேத் கோகலே செய்யும் அனைத்தும் ஆன்லைனில் மனுக்களையும் இலவசமாக தாக்கல் செய்வதால் அவர் தனது செயல்பாடுகளுக்கு எந்தப் பணத்தையும் செலவிடுவதில்லை. மாறாக, அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நன்கொடையாக வழங்கிய பணம் அனைத்தும் அவரது தனிப்பட்ட செலவிற்கே பயன்படுத்தப்பட்டது. சாகித் கோகலே தனது நடவடிக்கைகள், அது தொடர்பான வழக்குகளுக்கான சட்டக் கட்டணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி பெற்ற பணமும் அவரது தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காகவே செலவிடப்பட்டன என குற்றம் சாட்டப்படுகிறது. முன்னதாக, டிசம்பரில், பிரதமர் நரேந்திர மோடியின் மோர்பி வருகை குறித்து பொய்யான செய்தியைப் பரப்பியதற்காக குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாகேத் கோகலே பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.