ஐயப்பனை அவமதித்த கம்யூனிச தலைவர்

ஹிந்துக் கடவுள்களை அவமதிப்பதும், ஹிந்து கலாச்சாரத்தின் மீது கேள்வி எழுப்புவதும் இடதுசாரி கம்யூனிச தலைவர்களின் பழக்கம். அவ்வகையில் சமீபத்தில், கேரளாவின் சி.பி.எம் தலைவர் கே முகுந்தன், சமூக வலைதளங்களில் ஐயப்பனைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். முண்டகப்படம் கிளைச் செயலாளராக இருக்கும் இவர், தனது முகநூலில் ‘இரண்டு ஆண்களுக்கு இடையேயான இயற்கைக்கு மாறான உறவில் இருந்து கடவுள் ஐயப்பன் பிறந்தார்’ என்று எழுதினார். மேலும், ‘குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள்’ என்றார். அவரது பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது, கடும் சர்ச்சையைத் தூண்டியது. நெட்டிசன்கள் முகுந்தனை சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யத் தொடங்கினர். இதையடுத்து முகுந்தன் தனது முகநூல் பக்கத்தில் இருந்து தனது பதிவை நீக்கிவிட்டு மன்னிப்பு கோரினார். ஐயப்பனை வழிபடுபவர்களின் உணர்வுகளை அவரது கருத்து புண்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்ததாகவும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட அவர் ஒருபோதும் நடக்கக்கூடாத தவறை செய்ததாகவும் கூறினார்.