ரிஷி பாக்ரி என்பவர் பதிவிட்ட ஒரு டுவிட்டர் செய்தியில், “இந்திய ராணுவ வீரர்கள் சியாச்சின் பனிப்பாறையில் இப்போது மைனஸ் 29 டிகிரி செல்சியஸ் உறைபனி வெப்பநிலையில் ரோந்து வருகின்றனர்.” என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மகாராஷ்டிர காங்கிரஸ் சேவாதல், “சியாச்சின் இந்தியாவின் பகுதி அல்ல. தீவிர வானிலையில் உயிர் பிழைக்க இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளித்து சியாச்சினை கைப்பற்றும் பணி திட்டமிடப்பட்டது. இதற்காக, இந்திய ராணுவ வீரர்கள் அட்லாண்டிகாவுக்கு அனுப்பப்பட்டனர். சியாச்சின் இந்தியப் பகுதியின் ஒரு பகுதியாக இல்லை, காங்கிரஸ் அரசு தான் அதைக் கைப்பற்றியது என தெரிவித்துள்ளது. இதற்கு கடும் ஆட்சேபங்கள் எழுந்ததையடுத்து இப்போது, இந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது. இதேபோல மகாராஷ்டிர காங்கிரஸ் சேவாதல், தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், “காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை, 3 மாதங்களுக்குப் பிறகு நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு அக்டோபர் 1947ல் அதை ஏற்றுக்கொண்டது. நம்மிடம் தற்போதுள்ள காஷ்மீருக்கு காங்கிரஸ் தான் காரணம். உண்மையில் கில்ஜித் பல்திஸ்தான் மற்றும் ஸ்ரீநகர் வரை, ஹரி சிங் பாகிஸ்தானுக்கு எதிரான கட்டுப்பாட்டை இழந்தார்.” என மற்றொரு பொய்யை கூறியுள்ளது.