மதம் மாறு அல்லது வெளியேறு

உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாஃப்ராபாத்தைச் சேர்ந்த தீபா நிஷாத் என்பவர் கட்டாய மதமாற்றம் தொடர்பாக ரெஹ்ரா பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகார் ஒன்றில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வசிக்கும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் முஸ்லிம்மாக மதம் மாறுங்கள் அல்லது வீட்டை விற்றுவிட்டு வெளியேறுங்கள் என அடிக்கடி மிரட்டி அழுத்தம் கொடுத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களும் அவர்களது அண்டை வீட்டாரும், தீபா நிஷாத்தையும் அவரது குடும்பத்தாரையும் கொன்றுவிடுவதாக மிரட்டினர். வீட்டிற்குள் புகுந்து அந்த குடும்பத்தினர் அமைத்திருந்த கோயிலில் எச்சில் துப்பி இழிவு செய்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் கோயிலை இழிவு செய்தது, வீட்டின் மீது கல் எறிந்தது போன்ற சட்டவிரோத செயல்பாடுகளின் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரின் பேரில், ஏழு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோத மதமாற்றம் தடைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் சக்சேனா தெரிவித்தார்.