மத்திய கலாச்சார அமைச்சகம் டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வந்தே பாரதம் நிருத்ய உத்சவ் 2023ன் இரண்டு நாள் தேசிய அளவிலான இறுதிப் போட்டியை (கிராண்ட் ஃபைனல்) ஏற்பாடு செய்தது. 980 நடனக் கலைஞர்கள், இந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் கிளாசிக்கல் மற்றும் நாட்டுப்புற நடனங்களை உற்சாகமாக ஆடினர்.ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வை எடுத்துக்காட்டும் வகையில் நடனக் கலைஞர்கள் நடனமாடினர். வந்தே பாரதம் நிருத்ய உத்சவ் 2023 என்பது குடியரசு தின கொண்டாட்டம் 2023ன் கீழ் கலாச்சார அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நடனப் போட்டி நிகழ்வாகும். போட்டியானது 3 நிலைகளில் அதாவது மாநிலம், மண்டலம் மற்றும் தேசிய அளவில் நடைபெற்றது. நாட்டுப்புற, பழங்குடியினர், கிளாசிக்கல் மற்றும் தற்கால நாட்டிய இணைவு வகைகளில் 17 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட பங்கேற்பாளர்களிடமிருந்து 15 அக்டோபர் 2022 முதல் நவம்பர் 10 வரை உள்ளீடுகள் கோரப்பட்டன. கலாச்சார அமைச்சகத்தின் ஏழு மண்டல கலாச்சார மையங்களால் 2022 நவம்பர் 17 முதல் டிசம்பர் 10 வரை மாநில-யூடி அளவிலான மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இறுதிப் போட்டியாளர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 நடனக் கலைஞர்கள் 2023 குடியரசு தினத்தன்று ‘நாரி சக்தி’ என்ற கருப்பொருளில் ஒரு பெரிய கலாச்சார நிகழ்ச்சியை நடத்துவார்கள். இந்த நோக்கத்திற்காக, புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாற்றல் வடிவமைப்பாளர்களைக் கொண்ட ஒரு படைப்பாற்றல் குழு தடையற்ற கலாச்சார நிகழ்ச்சியை கருத்தியல் செய்வதில் ஈடுபட்டுள்ளது. இந்த இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓ.எம்.பிர்லா, மத்திய அமைச்சர்கள் ஜி.கிஷன் ரெட்டி, அர்ஜுன் ராம் மேக்வால், மீனாகாஷி லேகி மற்றும் அஜய் பட் ஆகியர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓம் பிர்லா, “நடன நிகழ்ச்சிகள் பாரத கலாச்சாரத்தின் மகத்தான பன்முகத்தன்மையை மட்டுமல்ல, அதன் துடிப்பான வண்ணங்களையும் செழுமையையும் பிரதிபலிக்கின்றன. வசுதெய்வ குடும்பகம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற வலுவான செய்தியை வந்தே பாரதம் உலகிற்கு அனுப்புகிறது.அம்ரித மஹோத்சவம் என்பது பாரதத்தின் வளமான பாரம்பரியம் மற்றும் அதன் ஜனநாயக கட்டமைப்பின் கொண்டாட்டமாகும்” என கூறினார்.