2023ம் ஆண்டு ஹாக்கி உலகக் கோப்பையை பாரதம் நடத்துகிறது.ஜனவரி 13 முதல் 29ம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் ஹாக்கி உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது.இதையொட்டி, ஹாக்கி கோப்பை, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.அவ்வகையில், மும்பையில் இருந்து விமானம் மூலம் ஹாக்கி கோப்பை சென்னை கொண்டுவரப்பட்டது. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் உலக கோப்பை பொதுமக்கள் பார்க்கும் வகையிலும் முன்னாள் ஹாக்கி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலுமான நிகழ்ச்சி ஒன்று தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 1975ம் ஆண்டு உலக கோப்பை வென்ற பாரத அணியில் இடம்பெற்று இருந்த தமிழக வீரர்களான கோவிந்தா, வி.ஜே பிலிப்ஸ், கிளாடியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், அவர்களுக்கு மேடையில் இடம் ஒதுக்கப்படவில்லை. முன்னாள் வீரர்களுக்கு மேடையில் இடம் இல்லாததை பார்த்த முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன், அங்கிருந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டார். ஆனால் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த உதயநிதி ஸ்டாலினிடம் புகார் அளித்தார்.அதன் பிறகே அவர்களுக்கு மேடையில் இடம் வழங்கப்பட்டது.