நாடாளுமன்றத்தில் இந்திய ஐடி சேவை துறையின் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “நாஸ்காம் அமைப்பின் தரவுகள் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளில் இந்திய ஐ.டி மற்றும் பி.பி.எம் சேவைத் துறையின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020ம் நிதியாண்டில் இத்துறையின் ஏற்றுமதி மதிப்பு 149 பில்லியன் டாலர்கள், 2021ம் நிதியாண்டில் 152 பில்லியன் டாலர்களாக இருந்தது.இது நிகழும் நிதியாண்டில் 178 பில்லியன் டாலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது கணிக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்தார். அவ்வகையில், 2022ம் நிதியாண்டின் கணிக்கப்பட்ட அளவின்படி அதிகப்படியான சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் இருந்து தற்போது 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இத்துறையில் டாப் 5 இடங்களில் ரூ.3.95 லட்சம் கோடி மதிப்பிலான ஐ.டி சேவை ஏற்றுமதியுடன் வழக்கம் போல கர்நாடக மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.2வது இடத்தில் மகாராஷ்டிரா ரூ.2.36 லட்சம் கோடியுடன் உள்ளது, தெலுங்கானா ரூ.1.8 லட்சம் கோடியுடன் 3ம் இடத்தில் உள்ளது.தமிழகம் ரூ.1.58 லட்சம் கோடியுடன் 4ம் இடத்தில் உள்ளது.உத்தரப் பிரதேசம் ரூ.55,000 கோடயுடன் 5ம் இடத்தில் உள்ளது.இதேபோல, 2021ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2022ல் அதிகப்படியான வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் 25 சதவீத வளர்ச்சி உடன் தெலுங்கானா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.கர்நாடகா 22 சதவீதம், உத்தரப் பிரதேசம் 21 சதவீதம், ஹரியானா 20 சதவீதம், மகாராஷ்டிரா 18 சதவீதம், தமிழகம் 16 சதவீதம் என்ற வளர்ச்சிப் படிநிலைகளில் உள்ளன.தெலுங்கானா மாநில தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் பல திட்டங்களையும், கொள்கை மாற்றங்களையும் ஐ.டி சேவை துறையில் செயல்படுத்தி வருகிறார்.அரசின் வேகமான ஒப்புதல்கள், செயல்பாடுகள், உள்கட்டமைப்பு வசதி மேம்பாடுகள் மூலம் முதலீட்டை ஈர்த்து வருகிறார். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, 2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என கூறிவரும் நிலையில், தொழில்துறையில் வேகமாக வளர்ச்சியடையும் மாநிலங்கள் வரிசையில் தமிழகம் பின்தங்கி வருவது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.