தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தனது சொந்த உழைப்பில் வாங்கி அணிந்திருக்கும் கைக்கடிகாரம் குறித்து அடிப்படை ஆதாரமற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த சூழலில், பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், ஆதன் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘ஸ்டாலின் மருமகன் சபரீசன் வைத்திருக்கும், ரிச்சர்ட் மில் 56 – 02 கைக்கடிகாரம் ஒன்றின் மதிப்பு மட்டுமே 14 கோடி. இதைத்தவிர ராயல் ஓக் கைக்கடிகாரம் நான்கு வைத்து இருக்கிறார்.அந்த கைக்கடிகாரங்களில் ஒன்றின் மதிப்பு மட்டும் ஒன்றே கால் கோடி.அப்படியெனில், நான்கு கைக்கடிகாரங்களின் மதிப்பு என்னவென்பதை நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.ரோஸ் கோல்ட் என்ற பெயரில் இரண்டு கைக்கடிகாரங்கள் வைத்துள்ளார்.அதன் மதிப்பு தலா ஒரு கோடி.உதயநிதி ஸ்டாலினின் கைக்கடிகாரத்தின் பெயர் புல்கேரி இதன் மதிப்பு ரூ.12 லட்சம்.இவர்கள் அண்ணாமலை வாட்ச் பற்றி பேச தகுதி இருக்கிறதா?என கேள்வி கேட்டுள்ளார்.இதேபோல பிரபல அரசியல் விமர்சகரான மாரிதாஸ், சபரீசனின் கைக்கடிகாரம், காலணி, பெல்ட், உடை, மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை பட்டியலை அம்பலப்படுத்தியுள்ளார்.மேலும், இதுகுறித்து தி.மு.கவினர் கேள்வி எழுப்பியதுண்டா என்றும் கேட்டுள்ளார்.