கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சி துணைத் தலைவராக இருந்தவர் மணி.தி.மு.க.வை சேர்ந்த இவர்.உடல் நலக்குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.இதையடுத்து, நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்றது.இதில், பா.ஜ.க. கவுன்சிலர் உன்னி கிருஷ்ணன் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.இவரை, எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த ஜெயசுதா 8 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.இதையடுத்து, தி.மு.க.விடமிருந்த துணைத் தலைவர் பதவியை பா.ஜ.க தற்போது கைப்பற்றயுள்ளது.இது, தி.மு.கவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.