ஜார்கண்ட்டில் லவ்ஜிஹாத் படுகொலை

டெல்லியில் தன்னுடன் லிவ்இன் டுகெதர் என திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்த ஷ்ரத்தா என்ற ஹிந்து பெண்ணை அவரது முஸ்லிம் காதலனான அப்தாப், கொடூரமாகக் கொன்று, ஷ்ரத்தாவின் உடலை  35 துண்டுகளாக கூறுபோட்டு காட்டில் வீசிய சம்பவம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து நாட்டையே அதிர்ச்சியடைய செய்தது. துளியும் ஈவு இரக்கமின்றி அரங்கேற்றப்பட்ட இந்த கொடூர செயல், அனைவருக்கும் வலியை ஏற்படுத்தியது. இதேபோல தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் மற்றுமொரு இளம்பெண் தனது முஸ்லிம் துணையால் கொல்லப்பட்டு துண்டுதுண்டாக வெட்டப்பட்டு வீசப்பட்டுள்ளார். ஜார்கண்டில் உள்ள சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ரூபிகா பகதின். ஹிந்து பழங்குடி இனத்தை சேர்ந்த இந்த இளம்பெண் தில்தார் அன்சாரி என்ற முஸ்லிம் நபரை காதலித்துள்ளார். தில்தார் அன்சாரி, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளதை மறைத்து அந்த பெண்ணுடன் பழகினார். பின்னர் இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 2 ஆண்டுகள் கழித்து இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த சூழலில் தனது மனைவி திடீரென காணாமல்போனதாக தில்தார் அன்சாரி போரியோ நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரும் தங்களது மகளை காணவில்லை என புகார் அளித்தனர். மேலும், தில்தார் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போரியோ சந்தாலி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு அங்கன்வாடி மைய கட்டிடத்தில் ஒரு பெண்ணின் உடலின் சில பாகங்கள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடலின் சில பாகங்களை நாய் ஒன்று கவ்வி செல்வதை பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற காவலர்கள் அங்கு கிடந்த 12 உடல் பாகங்களை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், அந்த உடல் காணாமல்போன ரூபிகாவுடையது என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தில்தார் அன்சாரியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது மனைவியை கொலை செய்து 50க்கு மேற்பட்ட துண்டுகளாக கூறுபோட்டு வீசியதையும் தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காகவே புகார் கொடுத்ததையும் ஒப்புக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடந்த காவலர்கள் அவரை கைது செய்ததுடன், மீதமுள்ள உடல் பாகங்களை தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற விசாரணையும் நடந்து வருகிறது.