ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 1996 முதல் 2001 வரையிலான ஆட்சி காலத்தில் பெண் கல்விக்கு தடை உள்ளிட்ட பிற்போக்குத் தனமான தடைகளை விதித்தனர். தற்போதைய தலிபான் 2.0 ஆட்சியாளர்கள், பெண்களின் கல்வி, ஆடை, வேலை ஆகியவற்றுக்கு தடைகள், கடுமையான கட்டுப்பாடுகள் உட்பட கடுமையான மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்கள் விதித்து வரும் இத்தகைய சட்டதிட்டங்களும் ஆப்கன் மீண்டும் அந்த பழைய பாதைக்குதான் மெல்ல ஊர்ந்து செல்லும் என்றே தோன்ற செய்கிறது. ஆப்கானிஸ்தான் குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் அம்ருல்லா சலே, ஆப்கனில் தற்போதைய தலிபான்கள் தலைமையிலான அரசு அமல்படுத்தியுள்ள புதிய பள்ளி பாடத்திட்டம் குறித்து அம்பலப்படுத்தியுள்ளார். அதில் அவர், “தலிபான்களின் இந்த புதிய பாடத்திட்டத்தில், ஐ.நா சபை சாத்தானியம் கொண்டது, பெண்கள் என்பவர்கள் தீமை, ஊழல் மற்றும் தன்னார்வம் ஆகியவற்றின் கயிறுகள், முஸ்லிம் அல்லாத மனிதர்களை ஒழிக்க அழைப்பு விடுத்தல் என்பது உட்பட 62 மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில், பெண்கள் என்பவர்கள் தீமை, ஊழல் மற்றும் தன்னார்வ கயிறுகள். முஸ்லிம் அல்லாத மனிதர்கள் அவர்களை ஒழிக்க அழைப்பு விடுக்கின்றனர்’ என கூறியுள்ளார். மேலும், இந்த பாடத்திட்டம் மிகவும் மோசமானது, தீமை விளைவிக்கும். பாகிஸ்தானின் செல்வாக்கு பெற்ற இந்த மதகுரு பாசிசம் ஆப்கனில் தோற்கடிக்கப்படும் வரை, சிறுவர் பள்ளிகளும் மூடப்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் பள்ளிகள் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும். இதில் பற்றி எரியும் கேள்வி என்னவென்றால், அத்தகைய போதனைகள் அடங்கிய கல்வி புத்தகங்களுக்கு அமெரிக்கா வாரம் 40 மில்லியன் நிதுயுதவி அளிக்கவுள்ளதா? என்பதுதான்” என கேள்வி எழுபியுள்ளார். தாலிபான்களை ‘சீர்திருத்தப்பட்டு மாற்றப்பட்டவர்கள்’ என்று போலியாக சித்தரிக்கும் ஊடகங்களையும் கடுமையாக சாடினார். பாகிஸ்தான் அதன் புற்றுநோய் பாதித்த பாசிச கொள்கைகளுக்காக ஆப்கானிஸ்தானை அவுட்சோர்சிங் செய்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் அதன் புவிசார் அரசியல் திட்டத்தை செயல்படுத்துகிறது என கூறியுள்ளார்.