புறக்கணிக்க அழைப்பு

பாலிவுட் ரசிகர்கள் இப்போது மீண்டும் பாய்காட் பாலிவுட் என்ற புறக்கணிப்பு கலாச்சாரத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு சில மாதங்களுக்கு முன் ஹிந்துக்களையும் தேசத்தையும் கேவலபடுத்தும் விதமாக அமீர்கான் நடித்த லால் சிங் சத்தா படமும் பிரம்மஸ்த்ரா படத்துக்கும் எதிராக பாய்காட் என்ற ஒரு பெரிய புறக்கணிப்பு பிரச்சாரம் வெற்றி பெற்றது. இந்த படங்கள் இதனால் லால் சிங் சத்தா படம் பெரும் தோல்வியை தழுவியது.இந்த சூழலில் தற்போது நடிகர் ஷாருக் கான் நடித்த ‘பதான்’ என்ற திரைப்படத்துக்கு எதிராக பாய்காட் பதான் (#BoycottPathan) டுவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது.இதில், தீபிகா படுகோன் காவி உடையில் மிகவும் குட்டையான உடை ஒன்றில் காட்டப்பட்டார்.மேலும், ‘பேஷரம் ரங்’ (அவமானகரமான நிறம்) என்ற பதான் படத்தின் புதிய பாடல் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்கள், நடிகர் அனைவரும் காவியை அவமானகரமான நிறம் என்று அழைப்பதாக மக்கள் கருதினர்.எனவே, டீசர் வெளியிட்ட 2 மணி நேரத்தில், சமூக ஊடகங்களில் மக்கள் ட்விட்டரில் பாய்காட் பதான் என்ற ஒரு புதிய டிரெண்விங்கைத் தொடங்கினர்.இது தற்போது சூடி பிடித்து வருகிறது. ஷாருக்கான் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள  ஹிந்து மத வழிபாட்டு தலமான மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியது ஏன் என்று இப்போது தெரிகிறது என நெட்டின்சன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். தனது படங்களில் எல்லாம் ஹிந்து மத துவேஷத்தையும் ஹிந்துக்களை கேலி செய்வதையும் வழக்கமாக தொடர்ந்து செய்துவந்த அமீர்கான், தனது லால் சிங் சத்தா படம் படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, சமீபத்தில் தனது ‘அமீர்கான் புரொடக்ஷன்ஸ்’ என்ற தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் ஹிந்து முறைப்படி பூஜைகளை செய்து திறந்து வைத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.