ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ என்ற நடைபயணத்தை திட்டம் தீட்டி ஒருங்கிணைத்தது செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர்கள் இடதுசாரி தாராளவாதிகள் தான் என அவரது நடைபயணத்தின் ஆரம்பத்திலேயே குற்றம் சாட்டப்பட்டது. அதற்கேற்ப தனது நடைபயணத்தில் ராகுல், பல பிரிவினைவாதிகள், ஹிந்துக்களையும் தேசத்தையும் தேசத் தலைவர்களையும் தவறாக பேசிய ஜார்ஜ் பொன்னையா, யோகேந்திர யாதவ், மேதா பட்கர் உட்பட பல சர்ச்சைக்குரியவர்களை சந்தித்து வந்தார். மேலும், சுதந்திர போராட்ட தியாகி வீர சாவர்க்கரை பற்றி தவறாக பேசியது, பொய்யான பல தகவல்களை அளிப்பது என செயல்பட்டு வந்தார். மேலும், இந்த பாரத் ஜோடோ யாத்திரையில், ‘செயல்பாட்டாளர்கள்’ மற்றும் சோசலிஸ்டுகள் என அழைக்கப்படு அருணா ராய், தேவனுரா மகாதேவ், அலி அன்வர், டாக்டர் சுனிலம், பெஸ்வாடா வில்சன் உள்ளிட்ட சுமார் 150 பேர் ராகுல் காந்தியுடன் இணைந்து கொள்கின்றனர். இதற்கு சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி, போன்ற பல அரசியல் கட்சிகளின் மறைமுக ஆதரவும் உள்ளது. இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூரின் படோதி பகுதியில் நடைபெற்ற ராகுலின் இந்த யாத்திரையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டார். ரகுராம் ராஜன், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் எவ்வித ஆதாரமும் இன்றி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருபவர்.இவர் ராகுலின் நடை பயணத்தில் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.