உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில், ஹிந்து சிறுமி ஒருவரை கடத்தி, கட்டாயப்படுத்தி முஸ்ளிம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் ஈடுபட்ட மௌலவி கல்லு, அசோதார் பகுதியைச் சேர்ந்த அன்சார் அகமது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.எட்டு மாதங்களுக்கு முன் அந்த சிறுமி காணாமல் போனார்.இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சிறுமியை அன்சார் மற்றும் மௌலவி ஆகியோர் கடத்திச் சென்றது தெரியவந்தது.ஆனால் அவர்களது வசிப்பிடத்தை காவலர்களால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.சமீபத்தில், மௌலவி வசிப்பிடமும் அவர், சிறுமியை மதம் மாற்றி திருமணம் செய்து வைத்தது குறித்தும் அந்த குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.இதனையடுத்து, அவர்கள் காவலர்களுடன் மௌலவியின் இல்லத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர்.காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளை கைது செய்தனர்.அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த கட்டய மதமாற்றத்திற்கு உதவிய மேலும் 10 பேர் குறித்து தெரியவந்தது.அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.