மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான ராஜா படேரியா, காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “பிரதமர் மோடி சமூகத்தை பிளவுபடுத்துகிறார். அரசியலமைப்பை பாதுகாக்க மோடியை கொல்லுங்கள்.சிறுபான்மையினரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், மோடியை கொல்ல மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என பேசியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏர்படுத்தியது. இதுகுறித்து பேசிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, “பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கீழ்த்தரமான கருத்துகளை வெளியிடுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டார். சோனியா அவரை ‘மௌத் கா சவுதாகர்’ என்று அழைத்தார்.தற்போது பிரதமரை கொல்ல வேண்டும் என படேரியா கூறுகிறார்.இது காங்கிரஸ் கட்சியின் விரக்தியை தவிர வேறு எதையும் வெளிப்படுத்தவில்லை.படேரியா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்றார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், “பிரதமர் மோடியின் வளர்ச்சி மற்றும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை காங்கிரஸ் கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. படேரியா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.