இருமாநில சட்டப் பேரவைத் தேர்தல்களுடன் இணைந்து நடைபெற்ற இதைத்தேர்தல்களில், பீகார் மாநிலம் குர்ஹானி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஒன்று.நிதீஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கியத் தொகுதி இது.இத்தொகுதியில், பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில் கடந்த 3 முறை வென்றுள்ள ஜே.டி.யு கட்சியின் மனோஜ் குஷ்வாஹாவை பா.ஜ.கவின் கேதார் பிரசாத் குப்தா 3,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இது நிதீஷ் குமாருக்கும் அவரது கூட்டணியில் உள்ள ஆர்.ஜே.டி, கங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சுஷில் குமார் மோடி, இடைத்தேர்தல் முடிவு ஐக்கிய ஜனதா தளத்தின் மிகப்பெரிய தோல்வி. இந்த பெரிய தோல்விக்குப் பிறகு, நீங்கள் (நிதீஷ்குமார்) உங்கள் ராஜினாமாவைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாக்குகள் இனி உங்களுடையது அல்ல, அது பா.ஜ.கவுக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த தோல்வி முதல்வர் நிதிஷ்குமாரின் ஆர்.ஜே.டி கட்சிக்கும் கூட்டணியில் உள்ள லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சிக்கும் இடையே பதட்டத்தைத் தூண்டியுள்ளது. நிதீஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து விலகி தேஜஸ்வி யாதவுக்கு வழிவிட வேண்டும், அவரை முதல்வராக்க வேண்டும் என ஆர்.ஜே.டி கட்சியினர் தற்போது கோரிக்கை வைக்கத் துவங்கியுள்ளனர்.