ரயில் ஹோப் இந்தியா என்ற கிறிஸ்தவ மிஷனரி அமைப்பு ஒன்று, இந்த பெயரை தவறாக பயன்படுத்தி, ஒரு தொண்டு நிறுவனமாக காட்டிக்கொண்டு அப்பாவி மக்களை குறிப்பாக ரயில்வேதுறை ஊழியர்கள், ரயில்நிலையம் மற்றும் ரயில்வே துறையை சார்ந்த வர்த்தகர்கள், கடைக்காரர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பயணிகளையும் வேறு பிற போக்குவரத்து சேவையில் இருப்பவர்களையும் மதமாற்றம் செய்ய வேட்டையாடி வருகிறது. இந்த மிஷனரி அறக்கட்டளையின் இணையப் பக்கத்தில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டுள்ள ரயில் ஹோப் இன்டர்நேஷனல் என்ற இதன் தாய் நிறுவனம் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் நோக்கம்: ரயில்வேயில் மற்றும் பிற பொதுப் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் கிறிஸ்தவர்களை ஊக்குவிப்பது, உள்ளூர் அல்லது பிராந்திய பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துவது, இதற்காக பல நாடுகளில் தேசிய சங்கத்தை உருவாக்குவது ஆகும். இந்த இணையதளம் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியவர்களின் சாட்சியங்களுடன் தொடர்கிறது.அந்த அமைப்பின் இந்திய அமைப்பை டேவிட் ராவ் என்ற ஒருவரும், சரஹு அபிநயா என்ற பெண்ணும் நடத்தி வருகின்றனர்.டேவிட் ராவ் தற்போது சுபவார்தா என்ற கிறிஸ்தவ டிவி சேனல் ஒன்றிலும் பணிபுரிகிறார். அந்த நபர் தனது சாட்சியத்தில், “நான் மரங்கள், பணம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பசுக்கள், பாம்புகள், குன்றுகள் மற்றும் பல கற்கள் மற்றும் மலைகள், நீர், நெருப்பு மற்றும் எதை வணங்கவில்லை. என்ன ஒரு குருட்டு நம்பிக்கை.இந்தியாவில் அவர்கள் மூன்று மில்லியன் கடவுள்களை வணங்குகிறார்கள் என ஹிந்து மதத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்.இதனை நடத்தும் மற்றொரு நபரான சாராஹு அபிநயா, தற்போது சென்னையில் தெற்கு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராகப் பணிபுரிந்து வருகிறார்.இவரும் இதில், கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவது பற்றி பேசுகிறார். அப்படியெனில், இவர்களின் பிரார்த்தனை கூட்டங்கள், சுவிசேஷ, மதமாற்று நடவடிக்கைகள் இந்திய அரசின் ரயில்வே துறை வளாகங்களில், அரசு ஊழியர்கள் பணிபுரியும் நேரங்களில் எல்லாம் தடையின்றி நடைபெற்று வருகிறதா என்ற கவலையை இது தூண்டியுள்ளது. இந்த இணையதளத்தில் எஸ்.அருள்ராஜ் என்ற மற்றொரு நபர் ரயில்ஹோப் இன்டர்நேஷனல் சுவிசேஷகரும் அடையாளம் காணப்பட்டுள்ளார். வெளி நாட்டு நிதியுதவி பெறும் எப்.சி.ஆர்.ஏ பட்டியலில் இடம்பெறாத இந்த ரயில்ஹோப் மிஷனரி இந்திய அறக்கட்டளை, சுவிட்சர்லாந்தின் ரயில்ஹோப் இன்டர்நேஷனலில் இருந்து வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ளது. இது மதமாற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதன் நிதியுதவி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை கோரி சட்ட உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (எல்.ஆ.ர்ஓ) மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அளித்துள்ளது.