முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பயங்கரவாதி ஏ.ஜி பேரறிவாளனை சென்னை தரமணியில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரி (Asian College of Journalism) விரிவுரையாராக விருந்தினராக அழைத்துள்ளது. இது சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் திட்டம் 39 ஏ’வின் ஒரு அத்தியாயத்தையும் ஆசிய இதழியல் கல்லூரி கொண்டுள்ளது.இது வருடாந்திர விருந்தினர் விரிவுரையை ஏற்பாடு செய்கிறது.அவ்வகையில் ‘குற்றவில திட்ட வருடாந்திர விரிவுரை தொடர் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, வரும் 17 டிசம்பர் 2022 அன்று “மறுக்கப்பட்ட நீதியும் முற்றுப் பெறாத தேடலும்” என்ற தலைப்பில் பேச, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி விடுவிக்கப்பட்ட, முன்னாள் பிரதமரை கொன்ற பயங்கரவாத குற்றவாளியான பேரறிவாளன் பேசுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பயங்கரவாதியை ஒரு நிரபராதியாக சித்தரிக்க முயலும் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இக்கல்லூரி, பத்திரிகையாளர் சஷி குமார் தலைமையிலான மீடியா டெவலப்மென்ட் பவுண்டேஷனின் கீழ் இயங்கி வருகிறது.தி ஹிந்து இதழின் என்.ராம் மீடியா டெவலப்மென்ட் அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.