பாதிரிகளின் தேச விரோத போராட்டம்

கேரளாவில் உள்ள விழிஞ்சம் டிரான்ஸ்ஷிப்மென்ட் துறைமுக திட்டத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக் கிழமை, லத்தீன் கத்தோலிக்க திருச்சபை பாதிரிகளின் தலைமையில் கிளம்பிய வன்முறை கும்பல் ஒன்று, காவல் நிலையத்தின் மீது தாக்குதல், காவலர்கள் மீது கொடூரத் தாக்குதல், காவல்துறை அதிகாரிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தல், வாகனங்கள் உள்லிட்ட பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் என பயங்கர வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டது. நவம்பர் 26 அன்று இத்திட்டத்திற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டவர்களை விடுவிக்க இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக வன்முறையாளர்கள் கூறினர். இது அரசால் எழுதப்பட்ட ஆத்திரமூட்டல்களுக்கு இயற்கையான பதில் மட்டுமே. போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ள கிறிஸ்தவ சபை, தனது வன்முறையை நியாயப்படுத்த முற்பட்டது. இதுகுறித்து பேசிய கேரள மாநில துறைமுகத்துறை அமைச்சர் வி அப்துரஹிமான், விழிஞ்சம் சர்வதேச கடல் துறைமுகத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை, சர்ச்சுகள் நடத்தும் போராட்டங்கள் எல்லாம் தேச விரோதமானது. இந்தப் போராட்டங்கள் தேசிய நலன்களுக்கு எதிரான குற்றம். நாட்டை நேசிப்பவர் என்ற வகையில் இந்தப் போராட்டங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான கட்டுமானப் பணிகளைத் தடுப்பது தேச விரோத நடவடிக்கையாக கருதப்பட வேண்டும். இந்த ஆர்ப்பாட்டங்கள் வெறும் எதிர்ப்புகள் என்று நான் நினைக்கவில்லை, அது வேறு விஷயம். அரசு முன்பு பல சவால்களை தீர்த்துள்ளது. ஆனால் அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கு அரசுக்கும் ஒரு எல்லை உண்டு. போராட்டக்காரர்கள் நிலைமையை உணர வேண்டும். துறைமுகம் விரைவில் நிறைவேறும். திட்டத்தை குறித்த நேரத்தில் செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது” என்றார்.