முஸ்லிம்கள் ஆக்கிரமித்த பெருமாள் கோயில்

விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த மலைமண்டலப் பெருமாள் கோயில் செங்கல்பட்டு அருகில் உள்ளது. ஆவணங்களின்படி இக்கோயில் ஹிந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. ஆனால் அப்படியொரு கோயில் இருப்பதையே பலர் மறந்து விட்டனர். பழையான கோயில் இருந்த இடத்தில் ஒரு பாழடைந்த மண்டபம் பராமரிப்பு இன்றி இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து சில முஸ்லிம் நபர்கள் அங்கு சென்று அங்கு ஒரு பச்சைத்துணி போர்த்தி, முஸ்லிம் மதகுரு சமாதியாகக்காட்டி ஆக்கிரமித்தனர். சில முஸ்லிம் நபர்கள் அடிக்கடி அங்கு வந்து செல்வதைத் பார்த்த உள்ளூர் மக்கள், அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோதுதான் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, மக்கள் இந்த ஆக்கிரமிப்பு குறித்து ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு தகவல் கொடுத்ததுடன் அதை மீட்கவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு சென்ற அதிகாரிகள், நிலத்தை அளந்து மீட்டுள்ளனர். ஹிந்துக்களின் கவனக் குறைவாலும் மதசார்பின்மை போதையாலும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கினாலும் பல நூற்றுக்கணக்கான நமது தொன்மையான புனித இடங்களை நாம் இழந்துள்ளோம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.