தி.மு.கவின் கடத்தல் சகோதரர்கள் கைது

தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, போதைபொருள் பயன்பாடு என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அரசியல்வாதிகள், வாரிசுகள், குடும்ப உறுப்பினர்கள், அதிகாரிகள் மட்டத்தில் ஊழலும் லஞ்சமும் தலைவிரித்து ஆடுகிறது. தி.மு.க கவுன்சிலர்களின் அக்கப்போர் சொல்லிமாளாது. உச்சாணி கொம்பில் ஏறிவிட்ட விலைவாசிகளும் வரிகளும் விழியை பிதுங்க வைக்கின்றன என மக்கள் அன்றாடம் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 19வது வார்ட் தி.மு.க கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ் மற்றும் அவரது சகோதரரும் கீழக்கரை நகராட்சி தி.மு.க முன்னாள் கவுன்சிலருமான ஜெயினுதீயின் இருவரும் இணைந்து ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 360 கோடி மதிப்புள்ள கோகைன் என்ற போதைப்பொருளை கடற்படை காவலர்கள் பறிமுதல் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களை, இலங்கைக்கு கடத்த முயன்று, போலீசார் பறிமுதல் செய்தது இதுவே முதல் முறை. தி.மு.கவின் இந்த கடத்தல் சகோதரர்களுக்கு சொந்தமாக சென்னை டு ராமநாதபுரம் சரக்கு லாரி சர்வீஸ் நிறுவனம் ஒன்று உள்ளது. எனவே, இவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் ‘மாபியா’ கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் மத்திய மாநில உளவுத்துறையினர், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.