போக்சோவில் சிக்கும் மதரசா ஆசிரியர்கள்

கடந்த சில நாட்களாகவே கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் போஸ்கோ சட்டத்தின் பல வழக்குகள் பதிவாகி வருகின்றன. அவ்வகையில், சமீபத்தில், கோழிக்கோட்டில் முழபிலாங்காட்டை சேர்ந்த 13 வயதான ஒரு மைனர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கண்ணூரை சேர்ந்த மதரசா பள்ளி ஆசிரியர் ஷம்சீர் கைது செய்யப்பட்டுள்ளார். எடக்காட்டில் நடந்த இந்த சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் மாணவியை கொன்று விடுவதாக ஷம்சீர் மிரட்டியுள்ளார். எனினும், சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மௌலானா கைது செய்யப்பட்டார். அவர் மற்ற மாணவர்களையும் துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல மலப்புரம் மாவட்டம் வெங்கரா பள்ளியைச் சேர்ந்த அப்துல் கரீம் என்ற ஆசிரியர் போக்ஸோ குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். 13 வயது மாணவியின் புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, இந்த துன்புறுத்தல் குறித்து தகவல் கொடுத்ததால், பள்ளி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்தது. மேலும், ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்புகளில் படிக்கும் 15க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அப்துல் கரீம் மீது இதுபோன்ற புகார்களை முன்வைத்தனர். அப்துல் கரீமிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வகுப்பில் அவர், பல வயது குறைந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இவர், தடைசெய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் மலப்புரம் வடக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமையன்று, பள்ளித் திருவிழாவின் போது மாணவியை மானபங்கப்படுத்த முயன்ற யூசுப் என்ற ஆசிரியர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கொல்லம் மாவட்ட பள்ளி கலை விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. மற்றொரு சம்பவமாக, கடந்த சனிக்கிழமையன்று, மலப்புரத்தில் உஸ்தாத் இப்ராகிம் என்பவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அதே மாவட்டத்தில் உள்ள பாங் நகரைச் சேர்ந்த இவர், கோடூர் முண்டக்காடு மசூதியில் ஆசிரியராக உள்ளார். சைல்டு லைனிலிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், மலப்புரம் மகளிர் காவல் நிலைய காவலர்கள், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மசூதி மஹால் கமிட்டியைச் சேர்ந்த சிலர், போலி புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

(செய்தி ஆதாரம்: https://hindupost.in/crime/multiple-child-sex-abuse-cases-involving-madrassa-clerics-pfi-functionary-and-others-kerala/)