கத்தார் நாடு, உலகக் கோப்பை 2022’ஐ பயன்படுத்தி மதமாற்ற நிகழ்வுகளை ஊக்குவித்து வருகிறது என உலகம் முழுவதும் பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், “2022 ஃபிஃபா உலகக் கோப்பையை ஒட்டி கத்தாரில் மக்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறிவருகின்றனர். இதுவரை 500க்கும் அதிகமானோர் இவ்வகையில் மதம் மாறியுள்ளனர்” என சர்ச்சைக்குரிய முஸ்லிம் மத செயற்பாட்டாளர் மஜித் ஃப்ரீமேன் கூறியுள்ளார். ஃபிஃபா உலகக் கோப்பை 2022ஐ ஒட்டி இதுபோன்ற மதமாற்றங்களை ஃப்ரீமேன் மட்டும் கூறவில்லை. கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை ஒட்டி இதுவரை 558 பேர் இஸ்லாத்திற்கு மாறியுள்ளதாக ஒரு டுவிட்டர் பயனரான அபு சித்திக் என்பவரும் கூறியுள்ளார். மேலும் தனது டுவிட்டரில், “விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும் விதத்திலும், ஷேக் டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் அவரது குழுவினரின் கத்தாரின் பிரமாண்டமான பிரவேசத்துடன், ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் ஒளியைக் கண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள்” என தெரிவித்துள்ளார். 5 பில்லர் யுகே என்ற பிரச்சார இணையதளத்தின் துணை ஆசிரியரான டில்லி ஹுசைன் என்பவரும் ஃபிஃபா உலகக் கோப்பை யையொட்டி இதுவரை 558 பேர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளனர் என கூறியுள்ளார். இவர்கள் இவ்வாறு கூறியிருந்தாலும், முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்கள் குறித்து ஊடகங்களில் எந்த செய்தியும் வெளியாகவில்லை.