கர்நாடக மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பழைய உப்பள்ளி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிக்கலிகர் சமூக மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இதில் ஒரு நபர் தனது மனைவியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற வற்புறுத்தியுள்ளார். அவர் மதம் மாறவில்லை என்றால், தன்னுடன் சேர்ந்து வாழக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். இதுகுறித்து அந்த பெண் தனது சமூக மக்களிடம் முறையிட்டார். இதனையடுத்து அவர்கள் ஒன்று திரண்டு பழைய உப்பள்ளி காவல் நிலையத்தை நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், கிறிஸ்தவ மதபோதகர்கள், ஒரு ரவுடி உள்பட 15 பேர் அடங்கிய மதமாற்று கும்பல், அப்பகுதி மக்களை தொடர்ந்து சந்தித்து பேசியும் வற்புறுத்தியும் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 15 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.