தமிழக அரசின் மனு தள்ளுபடி

பிரபல யூடியூப் பிரமுகர் மாரிதாஸ் மீது, சர்ச்சை வீடியோ வெளியிட்டதாகக்கூறி தமிழக காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மாரிதாஸ் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மாரிதாஸ் மீதான வழக்கை ரத்துசெய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக தி.மு.க அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அரசின் வாதத்தை ஏற்க மறுத்து, அதன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். எனினும், இந்த தள்ளுபடி உத்தரவு மாரிதாஸ் மீதான நிலுவை வழக்குகளை பாதிக்காது என்றும் தெளிவுப்படுத்தினர்.