நடவடிக்கை எடுக்காத காவல்துறை

கேரள மாநிலம், பாலக்காடு அஞ்சுமூர்த்தி மங்கலத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவரான மணிகண்டன் என்பவர் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 23ம் தேதி தனது வீட்டில் பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, மணிகண்டனின் பக்கத்து வீட்டுக்காரர் ரஹ்மத்துல்லாவும் அவரது மகனும் வந்து, ஏன் பட்டாசு வெடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதுடன், ஜாதியை சொல்லி திட்டி, மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். இருவரும் மணிகண்டனின் வயதான தாயை மார்பில் எட்டி உதைத்தனர். இதனால், ஏற்கனவே உடல் பலவீனமான அந்த தாய் இப்போது படுக்கையில் இருக்கிறார். இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து அவர் போராட்டம் நடத்தினார். இதனால் இந்த விவகாரம் பரபரப்பானது. வேறுவழியின்றி வழக்குப்பதிவு செய்த காவலர்கள், மணிகண்டனையும் அவரது தாயையும் உடல் ரீதியாக காயப்படுத்தியதற்காக மட்டுமே வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் வேண்டுமென்றே வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தை அதில் சேர்ப்பதைத் தவிர்த்தனர். ஒரு காலத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பானதாக கருதப்பட்ட பாலக்காடு மாவட்டம், தற்போது தீவிர முஸ்லிம் மதவாதிகளின் பயங்கரவாத மையமாக வேகமாக மாறி வருகிறது. ரஹ்மத்துல்லாவும் அவரது மகனும் கம்யூனிஸ்ட் ஆர்வலர்கள், சி.ஐ.டியு உறுப்பினர்கள் என்பதால், அந்த கட்சியின் சில தலைவர்கள் இதில் தலையிட்டு இந்த வழக்கை நீர்த்துப்போக செய்ய காவல்துறையினரை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் முதல்வர் தலையிட்டு நியாயம் வழங்க வகை செய்வார் என நம்புகிறேன் என்றார் மணிகண்டன்.

இதேபோல, எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுபுழா அருகே தீபாவளி தினத்தன்று அப்பகுதியில் உள்ள ஹிந்து குடும்பங்கள் பட்டாசு வெடித்ததால் ஆத்திரம் அடைந்த ரிசர்வ் போலீசில் பணியாற்றும் காவல் அதிகாரி ரஃபீக், தனது தலைமையில் ஆயுதம் ஏந்திய ஒரு முஸ்லிம் மதவெறி கும்பலை அழைத்துவந்து அங்குள்ள ஹிந்து சமூகத்தினரின் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள், குழந்தைகள் உட்பட பலரையும் கடுமையாகத் தாக்கினர். இதிலும், வழக்கம் போல், கேரள காவல்துறையினர், முதலில் வழக்கு பதிவு செய்ய மறுத்ததுடன் தாக்கியவர்களை இன்னும் கைது செய்யவில்லை. இந்த சம்பவம் பகிரங்கமானதை அடுத்து, உள்ளூர் அரசியல் தலைவர்கள் தலைமையில் சில முஸ்லிம்கள் வந்து சமரச முயற்சி செய்ய முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சம்பவங்கள் தற்போது தேசமெங்கும் டிரெண்டாகி வருகிறது. முஸ்லிம்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சரி ஹிந்துக்களின் பண்டிகைகளின் போதும் சரி, ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவது, ஹிந்துக்களின் கோயில்களை தாக்குவது, தூற்றுவது, விஷமத்தனம் செய்வது என பல வழிகளில் காயப்படுத்தி வருகின்றனர்.