ஆதாரை புதுப்பிப்பது கட்டாயம்

ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான யு.ஐ.டி.ஏ.ஐ சார்பில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்றவர்கள், உடனடியாக தங்களது வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.இதன்படி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள், விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.https://myaadhaar.uidai.gov.in இணையதளம் அல்லது அருகில் உள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று, தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றுஅந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.