இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார். இதற்காக பல்கலைக் கழக வளாகத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்விழாவில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்குகிறார். இதேபோல, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.