கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த எஸ்.கே.ஸ்ரீனிவாசன் கடந்த ஏப்ரல் 16ம் தேதி முஸ்லிம் பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஸ்ரீனிவாசன் கொலை தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த பல பயங்கரவாதிகளையும் சந்தேக நபர்களையும் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பும் இது தொடர்பாக பல இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. இந்நிலையில் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான எம். அனில் குமார், தன்னை ஒரு மர்ம நபர் சனிக்கிழமை இரவு தொலைபேசியில் மிரட்டியதாகவும் சவப்பெட்டி ஒன்றை தயாராக வைத்துக்கொள் என்று அச்சுறுத்தியதாகவும் பாலக்காடு தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.