தி கேரளா ஸ்டோரி டீசர்

கேரளாவில் லவ் ஜிஹாத் மூலம் காணாமல்போன 32,000 இளம்பெண்கள் குறித்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதத்தில் மதமாற்றம் அதிகம் நடக்கும் மாநிலங்களில் கேரளா, தமிழகம், பஞ்சாப், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன. கேரளாவில் உள்ள சில முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்கள், இதற்காக, ஹிந்து மற்றும் கிறிஸ்தவ இளம்பெண்களை குறிவைத்து செயல்படுகின்றனர். அந்த பெண்களை காதல், திருமணம், படிப்பு, வேலை, பாலியல் துஷ்பிரயோகம் என பலவகைகளில் ஏமாற்றி லவ் ஜிஹாத்தில் ஈடுபட்டு மதம் மாற்றிய பின்னர் அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களில் பாலியல் அடிமைகளாக விற்றனர். அந்த பயங்கரவாத அமைப்புகள் பலமாக செயல்பட்டு வரும் ஈராக், சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அவர்களை கடத்தினர். இவர்கள் யாரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை. இது இன்னமும் தொடர்கிறது.

அவ்வகையில், கடந்த 2009ம் ஆண்டு முதல் சுமார் 32,000 இளம்பெண்கள் கேரளாவில் மாயமானார்கள். இது கேரளாவையே உலுக்கியது. இப்படி கடத்தப்பட்ட பெண்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தை விபுல் அம்ருத்லால் ஷா என்பவர் தயாரித்துள்ளார். சுகிப்தோ சென் இதனை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்காக சுமார் நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்துள்ளார் சுதிப்தோ சென். இதற்காக, பல்வேறு அரேபிய நாடுகளுக்குச் சென்றும், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தார் மற்றும் உள்ளூர்வாசிகளை சந்தித்தும் தகவல்களை சேகரித்தார். இப்படத்தில் மதம் மாற்றப்பட்ட பெண்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத பகுதிகளில் சேர்க்கப்பட்டது எப்படி, இச்சதிச் செயலின் பின்னணியில் இருக்கும் உண்மைக் கதைகள், ஏமாற்றப்பட்ட அப்பாவி பெண்களின் வலி ஆகியவை எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

ஒரு நர்ஸாக வேண்டும் என்கிற கனவோடு இருந்த ஒரு பெண்ணை, அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்று, ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதியிடம் விற்கப்பட்டு அதனால் பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஷாலினி உன்னிகிருஷ்ணன் எனும் பெண்ணின் உருக்கமான பதிவுடன் இந்த டீசர் துவங்குகிறது. ”எனது பெயர் ஷாலினி உன்னிகிருஷ்ணன். ஒரு நர்ஸாக மனித நேயத்தோடு மக்களுக்கு சேவையாற்ற விரும்பினேன். ஆனால், தற்போது ‘பாத்திமா பா’ என்கிற பெயரில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்டு ஆப்கானிஸ்தான் சிறையில் இருக்கிறேன். நான் மட்டுமல்ல, என்னைப் போன்ற 32,000 இளம்பெண்கள் சிரியா, ஏமன் போன்ற நாடுகளின் பாலைவனத்தில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். கேரளாவில் இருக்கும் முஸ்லிம் பயங்கரவாதிகளால் இப்படியொரு அபாயகரமான விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்கு யாருமே இல்லையா?” என்கிற கேள்வியோடு முடிக்கிறார்.

1990களில் ஜம்மு காஷ்மீரில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய ஹிந்து இனப்படுகொலைகள், கற்பழிப்புகள், ஹிந்து பண்டிட்களுக்கு நேர்ந்த கொடூரங்கள், ஒரே இரவில் தங்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட கொடுமைகள் போன்ற உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம். இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் வெளியான இப்படம் பாரதம் மட்டுமின்றி உலக நாடுகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அப்போது பாரதத்தையும் ஜம்மு காஷ்மீரையும் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட ஆட்சியாளர்களின் உண்மை முகம் வெளிப்படுத்தப்பட்டது. அவ்வகையில், விரைவில் வெளியாகவுள்ள தி கேரளா ஸ்டோரியும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.