குஜராத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும். டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்த செய்தி வெளியாவதற்கு முன்னரே காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், “தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே, தீயதை பேசாதே என்ற மூன்று குரங்குகளின் எமோஜியை பதிவிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்தக்கூடிய ஒரு தன்னிச்சையான அமைப்பு” என்று தெரிவித்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த கேலிக்கு பா.ஜ.க கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா “தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை காப்பாற்றும் வேலையைத் தொடங்கி விட்டது. தோல்வி பயத்தில் தனது வழக்கமான பாணியை தொடங்கி உள்ளது. ஏனென்றால் ராகுல் காந்தி காப்பாற்றப்பட வேண்டும்” என்று தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் ட்வீட்டை டேக் செய்துள்ளார்.
தங்கள் தோல்வியை மறைக்க காங்கிரஸ் கட்சி சொல்லும் தேர்தல் ஆணையம் சார்புடையதாகிவிட்டது, வாக்கு இயந்திரம் ஹேக்கிங், விவிபேட் செயலிழப்பு போன்ற வழக்கமான சதி கோட்பாடுகள், குற்றச்சாட்டுகள் வரிசையிலேயே இதுவும் பார்கப்படுகிறது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு தேர்தல் ஆணையம் சார்புடையதாக குற்றம் சாட்டப்படவில்லை. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றபோது வாக்கு இயந்திரம் ஹேக்கிங் செயப்பட்டதாகவோ விவிபேட் செயலிந்ததாகவோ இவர்கள் யாரும் குற்றம் சாட்டவில்லை. ஆனால், தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறும் இடங்களில் மட்டும் தான் இவர்களுக்கு இந்த கோட்பாடுகள் மீண்டும் உயிர் பெறும். தங்கள் தோல்விக்கு இவர்கள் தங்களைத்தவிர, தங்களது கட்சித் தலைமையைத் தவிர வேறு யாரையாவது தான் இதுவரை கைகாட்டி வந்துள்ளனர். இவர்களை பொறுத்தவரை, பாரதம் சுதந்திரம் பெற்றது முதல் காங்கிரஸ் கட்சி நாட்டை ஆட்சி செய்த காலங்களில் எல்லாம் தேர்தல் ஆணையம் முற்றிலும் சுதந்திரமாகவும், பாரபட்சமற்றதாகவும் இருந்தது, தேர்தல்கள் அனைத்தும் நேர்மையாக நடைபெற்றன என்பதுதான் சரியான வாதம்.