பொய்கள், தவறான நிர்வாகம் அதுதான் தி.மு.க

மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைகால முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மழை நீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன என தி.மு.க தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து சொல்லிக்கொண்டுள்ளது. மழையை திறம்பட சமாளித்தோம், சாலைகளில் மழை நீர் தேங்கவில்லை, 90 சதவீதம் வடிந்துவிட்டது என கூறுகிறார்கள் தி.மு.கவினர். ஆனால், முதல்வரின் தொகுதியே வெள்ளத்தில் மிதக்கிறது என்றால்; மற்ற இடங்களின் நிலைமையை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்நிலையில், ‘வெள்ளமில்லா சென்னை உதயமாகிறது’ என முரசொலியில் ஒரு புகழ்ச்சி கட்டுரையை போட்டு தனக்குத்தானே பாராட்டிக்கொள்கிறது தி.மு.க அரசு. ஆனால் களத்தில் உண்மை என்னவோ முற்றிலும் வேறாக உள்ளது. ஒரு மழைக்கே தாங்காமல் தத்தளிக்கிறது சென்னை. இரண்டு பேர் உயிரிழந்தனர். ஆனாங்கே பலர் சாலையில் ஏற்கனவே உள்ள பள்ளங்களிலும், தி.மு.க அரசால் தோண்டப்பட்ட குழிகளிலும் விழுந்து எழுந்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவில், “பொய்கள் மற்றும் தவறான நிர்வாகம்! அதுதான் தி.மு.க. மழைக்கு முன் போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால் சாமானியர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகும் சூழலில், இதயம் இல்லாத திராவிட முன்னேற்றக் கழக அரசு ‘நல்ல பணி செய்தோம்’ என்று தன் முதுகில் தானே தட்டிக்கொடுத்துக் கொள்கிறது. ஆனால், உண்மையான நிலைமை இதோ” என கூறி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.