விஜயபுரா உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி

கர்நாடக மாநிலத்தின் விஜயபுரா பகுதி மாநகராட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 35 இடங்களில் 17 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. நகர முனிசிபாலிட்டியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு விஜயபுரா அதன் முதல் தேர்தலை சந்தித்தது. இத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி இரண்டு இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. மற்ற ஐந்து இடங்களை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். மேலும், கொள்ளேகால் நகர முனிசிபல் இடைத்தேர்தலில் 7 இடங்களில் ஆறில் வெற்றி பெற்றது. கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, விஜயபுரா பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் யத்னாலுக்கும், நகராட்சித் தேர்தலில் ஒரு முன்னோடியான சாதனையை நிகழ்த்திய கட்சித் தொண்டர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.