உத்தரப் பிரதேசத்தில் ஒரு லவ் ஜிஹாத்

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தின் ஷிகோஹாபாத் காவல் நிலையத்தில், உத்தரபிரதேச ஆயுதப்படை காவல்துறை அதிகாரி ஒருவர் தன் மகளுக்கும் தன் குடும்பத்துக்கும் விடப்பட்ட லவ் ஜிஹாத் கொலை மிரட்டல்கள் குறித்து புகார் அளித்தார். அதில், “உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் வசிக்கும் ஷாருக் என்ற முஸ்லிம் இளைஞன் எனது மகளுடன் சமூக ஊடகத்தில் நட்பாகி காதலிப்பதாக ஏமாற்றினான். ஷாருக் எனது பெண்ணை அம்ரோஹாவுக்கு அழைத்துச் சென்று முஸ்லிம்மாக மதம் மாறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினான். இல்லையினில் என் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று பிளாக்மெயில் செய்து மிரட்டினான். மேலும் சில ஆவணங்களில் கையெழுத்திடும்படி வற்புறுத்தினான். தன்னை மதம் மாற்றி திருமணம் செய்ய மறுத்தால்,எனது மகள் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் தலையை துண்டித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டினான். ஷாருக், நான்கு போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி, அந்த கணக்குகளில் தனது அநாகரீக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றியதை எனது பெண் அறிந்துகொண்டாள். ஷாருக்கின் கண்காணிப்பில் இருந்து தப்பி என் மகள் என் மனைவியை தொலைபேசியில் அழைத்து இவற்றை கூறினாள். செப்டம்பரில் எனது மகள் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சமூகப் புறக்கணிப்புக்கு அஞ்சி அமைதியாக இருந்தேன். ஆனால் தற்போது எனது குடும்பத்தாருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் காரணமாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது மகள் தொடர்ச்சியான துன்புறுத்தலின் விளைவாக மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் மன அழுத்தத்தால் தனது தற்கொலை செய்து கொள்வது போன்ற தீவிர நடவடிக்கைகளை தனது மகள் எடுத்தால், அதற்கு ஷாருக் தான் பொறுப்பு என்றும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ஷாருக் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவான அவனை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உரிய விசாரணை நடத்தி மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரோசாபாத் கூடுதல் எஸ்.பி ரன்விஜய் தெரிவித்துள்ளார்.