பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத், ஹிமாசல பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த சூழலில், மக்களும் பா.ஜக.வும் விரும்பினால் தான் ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடத் தயார் என கங்கனா ரனாவத் சமீபத்தில் தெரிவித்திருருந்தார். கங்கனாவின் கருத்து குறித்து பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “கங்கனா ரனாவத் பா.ஜ.க’வில் சேர்வது வரவேற்கத்தக்கது. கட்சியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவருக்கும் பா.ஜ.கவில் இடமுண்டு. ஆனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது என்பது எனது தனி முடிவு அல்ல. அடிமட்ட தொண்டர்கள், தேர்தல் கமிட்டி, நாடாளுமன்ற குழு வரை அனைவரிடமும் ஆலோசனை செய்யப்படும். பா.ஜ.கவில் இணையும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அவர்களின் வலிமை என்ன என்பதை கட்சிதான் முடிவு செய்யும்” என்றார்.