கேரள மாநில அரசின் தவறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டியும் தடுத்தும் வருகிறார் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான். இதனால் ஆரிப் முகமது கானுக்கும் கேரள அரசுக்கும் இடையே அண்மைக் காலமாக கடுமையான மோதல் மோக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரையும் மத்திய அரசையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் என்பதை கேரள கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் ஒரு முடியை தொட்டால் கூட கேரள அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.