தீபாவளி பண்டிகையின்போது, நாட்டின் சில இடங்களில் ஹிந்து விரோத, வெறுப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அவ்வகையில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு ஹிந்து குடும்பத்தினர், தங்கள் வீட்டு வாசலில், தீபாவளியையொட்டி விளக்கேற்றி கோலம் போட்டிருந்தனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர் வீட்டு கிறிஸ்தவ குடும்பத்தினர், அந்த ஹிந்து குடும்பத்தை திட்டி துஷ்பிரயோகம் செய்ததுடன் செருப்பால் அடிக்க முயற்சித்தனர். மேலும், அந்த கோலத்தை காலால் அழித்ததுடன் விளக்குகளை காலால் எட்டி உதைத்து உடைத்து அவமானப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து ஹிந்து அமைப்புகள் இந்த மதவெறி சம்பவத்துக்கு எதிராக குரல் கொடுத்தன. சமூக ஊடகத்தினரும் பொதுமக்களும் இந்த கிறிஸ்தவ மதவெறி செயலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதில் காவல்துறை நடவடிக்கை கோரி சில ஹிந்து அமைப்புகள் அந்த அடுக்குமாடி குடியிருப்பு முன் போராட்டம் நடத்தின. இதையடுத்து அந்த கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர்களான ஷாலினி தேவ கிருபா (63), கிறிஸ்டோபர் (68), ராஜீவ் ஆப்ரகாம் (36) மற்றும் அஜித் எபினேசர் ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.