கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரனைக்கு முதல்வர் பரிந்துரைத்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் வரவேற்றுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், “கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு இருக்கலாமெனும் பேரச்சம் எழுந்துள்ள நிலையில் அதனை தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணைக்குப் பரிந்துரைக்க முதல்வர் ஸ்டாலின் முன்வந்திருப்பதை வி.சி.க. வரவேற்கிறது. பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார். அதேசமயம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரான வன்னியரசு இதனை எதிர்த்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், “கோவை சிலிண்டர் வெடிப்பு சம்மந்தமாக தமிழக காவல்துறை விசாரணை மற்றும் நடவடிக்கைகள் சரியான திசை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. என்.ஐ.ஏ என்பது மாநில உரிமைகளை பறிப்பதாகும். இதை வைத்து வழக்கம் போல, பா.ஜ.க.வின் வெறுப்பரசியலுக்கு என்.ஐ.ஏ உதவுமே தவிர வேறொன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்.