ஹிந்து அமைப்பு பிரமுகர் மீது கொடூர தாக்குதல்

கர்நாடக மாநிலம், சிவமொக்கா டவுனில் இரு நாட்களுக்கு முன் வீரசாவர்க்கர் நினைவு ஊர்வலம் நடந்தது. இதில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் உட்பட பல்வேறு ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அந்த ஊர்வலத்தில் அவர்கள், சமீபத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பஜ்ரங்தள் பிரமுகர் ஹர்ஷாவின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். ஊர்வலம் முடிந்த பின் அதில் கலந்து கொண்டவர்கள் கலைந்து தங்களது வீடுகளுக்கு சென்றனர். அதுபோல, ஊர்வலத்தில் கலந்து கொண்ட பிரகாஷ், சிவமொக்கா டவுனில் இருந்து தனது வீட்டுக்கு பேருந்தில் சென்றார். பின்னர் பேருந்தைவிட்டு இருந்து இறங்கி தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் வழிமறித்து கொடூரமாக தாக்கத் துவங்கினர். கைகளாலும், கற்களைக் கொண்டும் தாக்கினர். பிரகாஷ் அங்கிருந்து தப்பி தனது வீட்டை நோக்கி ஓடினார். ஆனால் அந்த மர்ம நபர்கள் அவரை விடாமல் விரட்டிச்சென்று சரமாரியாக தாக்கினர். மேலும், ஆர்.எஸ்.எஸ். வி.ஹெச்.பி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளுக்கு எதிராகவும் ஹிந்துக்களுக்கு எதிராகவும் தகாதமிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினர். அவர்களின் பிடியில் இருந்து தப்பியோடிய பிரகாஷ், ஒருவழியாக தனது வீட்டுக்கு சென்றார். அந்த மர்ம நபர்கள் 3 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் சிவமொக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் இதுபற்றி பிரகாஷ், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், இந்த வன்முறையில் ஈடுபட்ட மார்க்கெட் ஃபவுசன் என்ற தன்வீர், அஸர் என்ற அஸு மற்றும் ஃபராஸ் ஆகிய மூன்று முஸ்லிம் நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த தாக்குதல் சதித்திட்டத்தில் மொத்தம் 9 பேர் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. தப்பி தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் மிதுன்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இச்சம்பவம் தொடர்பாக யாரும் பீதி அடைய வேண்டாம். சிவமொக்காவில் அசாதாரண சூழ்நிலை இல்லை. அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்துறையியன்ர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனைச்சாவடி உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் அந்த மர்மநபர்களை பிடித்து விடுவோம்” என்றார். இருப்பினும் பதற்றம் நிலவுவதால் சிவமொக்கா முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.