மடாதிபதி தற்கொலை

கர்நாடக மாநிலம், ராம்நகர் மாகடி அருகே உள்ள சோலூர் கஞ்சுகல் பண்டி மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமிகள். இவர் இரு தினங்களுக்கு முன், இரவில் மடத்தில் உள்ள தனது ஓய்வறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் வழக்கமாக, பூஜைக்காக அதிகாலை 4 மணிக்கே எழுந்து தனது அறையின் கதவுகளைத் திறந்து வைத்திருப்பார். ஆனால், அன்று காலை ஆறு மணி வரை அவரது அறையின் கதவு மூடப்பட்டிருந்தது. கதவை தட்டியும், அலைபேசியில் அழைத்தும் அவர் பதில் அளிக்காததால் மடத்தின் ஊழியர்கள் அறையின் பின்பக்கம் சென்று பார்த்தபோது, ​​அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறை விசாரணையில் மடாதிபதி எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில், ‘எதிரிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அதை தடுக்க முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என, குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த எதிரிகள் யார் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது உடல் அடக்கம் மடத்தின் வளாகத்தில் நடைபெற்றது. அவரது கடித்தில் குறிப்பிட்டுள்ளவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.