கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கார் வெடிப்பு என்பது விபத்து அல்ல அதில் பயங்கரவாத உள்நோக்கம் உள்ளது, இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற ஏதேனும் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்கேற்ப ஏராளமான ஆதாரங்களும் கிடைத்து வருகின்றன. இதில் இறந்த ஜமேசா முபினின் கூட்டாளிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜமேசா முபின் உடல் பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது மனைவியிடம் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், உடலை அடக்கம் செய்ய ஜமாத்துகள் முன்வரவில்லை. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர்கள், கோவையின் அனைத்து ஜமாத்துகளும் அமைதியை விரும்புவதால், சமூக விரோத செயலுக்கு திட்டுமிட்டது போல் முபினின் மரணம் இருப்பதால் அவரது உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை என தெரிவித்தனர். இந்நிலையில் கோவை பூ மார்கெட் ஜமாத்தில் மனிதாபிமான அடிப்படை என கூறி முபினின் உடலை அடக்கம் செய்தனர். இதனையடுத்து கோவை மாநகரம் முழுவதும் காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினரின் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கோவை முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.