உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 40 வயதான் டெல்லியை சேர்ந்த பெண் ஒருவரை 5 மர்ம நபர்கள் கடத்திச்சென்று இரண்டு நாட்களாகக் கூட்டுப் பலாத்காரம் செய்து, அந்தரங்க உறுப்புகளில் கம்பியை செருகியதால், மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விஷயம் தேசிய அளவில் பாரபப்பை ஏற்படுத்தியது. டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி, “இது ஒரு கொடூரமான வழக்கு. நிர்பயா வழக்கைப் போன்று பயங்கரமானது. இது விரைவாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்”என்று கூறினார். அந்த பெண் தன்னுடன் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கில், முகமது ஷாருக், முகமது ஜாவேத், டினு, தோலா, முகமது ஔரங்கசீப் ஆகிய ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக காவல்துறை நான்கு பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றது. “நாங்கள் இந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். டெல்லியில் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்” என காசியாபாத் மூத்த காவல்துரை கண்காணிப்பாளர் முனிராஜ் கூறியுள்ளார்.